Advertisment

20 நாட்களில் 18 கொலைகள்… தலைநகரமா? கொலை நகரமா? ஜெயக்குமார் கேள்வி

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலை நடந்திருப்பதாகவும் அதனால் சென்னை தலைநகராமா அல்லது கொலைநகராமா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
20 நாட்களில் 18 கொலைகள்… தலைநகரமா? கொலை நகரமா? ஜெயக்குமார் கேள்வி

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலை நடந்திருப்பதாகவும் அதனால் சென்னை தலைநகராமா அல்லது கொலைநகராமா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

சென்னையில் இன்று (மே 25) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: “திமுக எதிர்கட்சியாக இருந்தபொழுது கருத்து சுதந்திரம் என வாய்கிழிய பேசினார்கள். இப்பொழுது ஊடகங்களுக்குக் கருத்து சுதந்திரம் இருக்கிறதா? நான் ஊடகங்களில் தினந்தோறும் இந்த ஆட்சியின் அவலங்களையும், எங்கள் கட்சியின் நிலைப்பாடுகளையும் தெரிவித்து வருவதால் என்மேல் அடுக்கடுக்காக வழக்குகள் போடப்பட்டுள்ளது. நான்கு வழக்குகளில் 28 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்னைக்கும் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன். பத்திரிகை துறையையும், எதிர்க்கட்சியையும் ஒடுக்க காவல்துறை ஏவல் துறையாக மாற்றப்பட்டு செயல்படுவது கண்டனத்திற்குரியது. எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 20 நாட்களில் 18 கொலைகள் நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். இது தலைநகரா? கொலை நகரா?, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தோல்வி, சட்ட ஒழுங்கு பராமரிப்பதில் தோல்வி, இது இரண்டைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்படுவது, ரவுடிகள் ராஜ்யம், ஆளுங்கட்சி அராஜகம் என எல்லாவற்றிலும் அத்துமீறல் நடைபெற்று வருகிறது. ” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Dmk Aiadmk Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment