/tamil-ie/media/media_files/uploads/2020/05/AIADMK-C-N-Rajadurai-Death.jpg)
AIADMK C N Rajadurai Death
அதிமுக-வின் மருத்துவ அணியைச் சேர்ந்த மருத்துவர் சி.என்.ராஜதுரை உடல்நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார்.
Coronavirus Live Updates : டாஸ்மாக் விவகராம், சென்னை தலைமை நீதிபதி தலைமையில் இன்று விசாரணை
தொலைக்காட்சிகளில் சொரியாசிஸ் உள்ளிட்ட தோல் நோய் பிரச்னைக்கு சித்தமருத்துவ முறையில் மருத்துவ தீர்வு என்று அடிக்கடி தோன்றுபவர் சித்த மருத்துவர் சி.என்.ராஜதுரை. இவர் சிஎன்ஆர்ஹெர்ப்ஸ் என்ற பெயரில் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார். சிஎன் ஆர் ஹெர்ப்ஸ் சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, எர்ணாகுளம் உள்ளிட்ட பெருநகரங்களில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவை விரட்டி அடித்த பகுதிகள் இவை தான் – சென்னையின் நிலையும் மாறும்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவர் அணி செயலாளராக உள்ள சி.என். ராஜதுரை, ஊரடங்கு உத்தரவுக்கு முன் சொரியாசிஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் சென்றிருக்கிறார். பின்னர் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கேயே இருந்திருக்கிறார். இன்று காலை பெங்களூர் வந்த அவர், உடல்நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.