Advertisment

'இனி எந்த தேர்தலிலும் பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை': கே.பி. முனுசாமி

'மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி இல்லை' என்று அ.தி.மு.க துணை பொதுச்செயளாலர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
AIADMK KP Munusamy on alliance with BJP ahead of poll

பா.ஜ.க ஆட்சி காலத்தில் அவர்கள் செய்த தவறுகளை கண்டிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டுவோம். தமிழ்நாடு மக்களின் நலன், உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பாடுபடும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Aiadmk | kp-munusamy | bjp: பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறிக்கும் முடிவில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) பின்வாங்காது என்று தமிழக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க துணை பொதுச்செயளாலருமான கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Advertisment

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:- 

பா.ஜ.க தேசிய தலைவர்கள் எங்களோடு பேச்சு வார்த்தை நடத்தினாலும் எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி இல்லை. பா.ஜ.க உடனான கூட்டணியை முறிப்பது என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு; அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.

மீண்டும் பா.ஜ.க-வுடன் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கூறுவது நடக்காது. பா.ஜ.க கூட்டணியில் நேரம் வரும்போது அ.தி.மு.க சேர்ந்துவிடும் என்பது கவனத்தைத் திசைதிருப்பும் செயல். மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி இல்லை.

2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர மாட்டோம். அண்ணாமலையை பா.ஜ.க மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அண்ணாமலையை மாற்றும் கோரிக்கையை வைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அண்ணாமலையை மாற்றக் கோருவது எங்கள் எண்ணம் இல்லை; நாகரீகமான தலைவர்கள் எங்களிடம் உள்ளனர். 

பா.ஜ.க ஆட்சி காலத்தில் அவர்கள் செய்த தவறுகளை கண்டிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டுவோம். தமிழ்நாடு மக்களின் நலன், உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பாடுபடும். 

இவ்வாறு அ.தி.மு.க துணை பொதுச்செயளாலர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Aiadmk Edappadi K Palaniswami Kp Munusamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment