அ.தி.மு.க அமைப்புச் செயலாளராகவும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான இருந்தவர் தளவாய் சுந்தரம். இவர் கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமாக செயல்படவில்லை என புகார் எழுந்த சூழலில், விஜயதசமி முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்திமங்கலத்தில் அக்டோபர் 6 அன்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்தான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, தளவாய் சுந்தரத்தை கட்சிப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.இந்த நிலையில், தளவாய் சுந்தரத்திற்கு அ.தி.மு.க-வில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு, 8.10.2024 அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
தளவாய்சுந்தரம், அந்நிகழ்வில் கலந்துகொண்டது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் தளவாய்சுந்தரம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“