Advertisment

அமித்ஷா-வுடன் இ.பி.எஸ் சந்திப்பு: தமிழக சட்டம்- ஒழுங்கு, தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன்முறையாக டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார்.

author-image
WebDesk
New Update
AIADMK leader EPS to meet Amit Shah in New Delhi today Tamil News

AIADMK Edappadi K Palaniswami -  Amit Shah Tamil News: அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். கோவையில் இருந்து பிற்பகல் 3.20 மணியளவில் டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக அமித்ஷாவை சந்திக்க இருக்கிறார். இதனால் அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க தலைவர்கள் இடையே கருத்து மோதல் வலுத்து வரும் நிலையில், அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க இருக்கிறார். இந்தக் சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் பேசப்படும் எனவும் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை, வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோரும் அமித்ஷாவை சந்திக்கின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Amit Shah Aiadmk Delhi Edappadi K Palaniswami Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment