Advertisment

காவலரை எட்டி உதைத்த செந்தில் பாலாஜி; எய்ம்ஸ் டாக்டர்கள் இவரை பரிசோதிக்கணும்: ஜெயக்குமார்

கைது செய்ய முயன்ற போது காவலரை எட்டி உதைத்த செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Jayakumar asked why Senthil Balaji is playing fake drama

அமைச்சர் செந்தில் பாலாஜி, டி ஜெயக்குமார்

Tamilnadu minister Senthil Balaji hospitalised after ED arrest Tamil News: அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

publive-image

இதனிடையே, கைது செய்ய முயன்ற போது காவலரை எட்டி உதைத்த செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கம் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப செந்தில்பாலாஜி கைது உள்ளது. அவரது கைது நடவடிக்கையை ஊரார் கைதட்டி வரவேற்கின்றனர். அவர் கைதானதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்கிறது.

publive-image

தி.மு.க ஆட்சியில் சட்டவிரோத டாஸ்மாக் பார்கள் மூலம் ரூ.2000 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனையால் அரசின் கருவூலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேட்டில் கிடைத்த பணம் ஒரே குடும்பத்திற்கு சென்றுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மதுவிற்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் 24 மணிநேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளில் பார்கள் மூலம் ஒன்றரை சதவிகிதம் வரைவு காசோலை மூலம் அரசுக்கு வரும் அதை செந்தில்பாலாஜி தனக்கு வரும்படி செய்துள்ளார்.

publive-image

அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து ஆய்வு முடிவை தெரிவிக்க வேண்டும். அவர் காவலரை எட்டி உதைத்துள்ளார். நெஞ்சுவலி வந்தால் எப்படி உதைக்க முடியும். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு அமைச்சர் பதிவியில் இருந்து உடனே செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்.

மேலும், நகமும் சதையுமாக அமைச்சரும் முதலமைச்சரும் உள்ளனர். குறிப்பாக, அண்ணா நகரில் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஏன் நீங்கள் இப்படி நடந்துகொள்ளவில்லை. வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி செல்லவேண்டியது தானே? என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Aiadmk V Senthil Balaji Jayakumar D Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment