vimarsanamAIADMK General Body Meeting LIVE Updates – Ex-Tamil Nadu CM EPS elected as AIADMK interim General Secretary; 16 resolutions adopted- சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக தாக்குதலில் ஈடுபட்டதாக கைதான இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக கட்சி அலுவலக மேனேஜர் மகாலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விருகை ரவி ஆகியோர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அ.தி.மு.க.,வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு, பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகள் திருத்தம் போன்றவை குறித்து தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மின்னஞ்சல் வழியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலடியாக அ.தி.மு.க பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி, பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதற்கான நோட்டீஸை எடப்பாடி பழனிசாமியிடம் மயிலாப்பூர் வட்டாட்சியர் நந்தினி வழங்கினார்
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வை ஏற்க கூடாது. அங்கீகரிக்க கூடாது என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்
நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என, ஓ.பி.எஸ் பின்புலத்தில் தி.மு.க இருப்பதாக இ.பி.எஸ் குற்றம்சாட்டிய நிலையில் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
சட்டம், ஒழுங்கு காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த இ.பி.எஸுக்கு தெரியாதா? என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. யாருடைய அழிவிலும் திமுக இன்பம் காணாது. ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்களா? அதிமுக செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. சமூக விரோதிகள் அத்துமீறுவார்கள் என காவல்துறையில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது என, சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொண்டர்களை சந்தித்த இ.பி.எஸ் கூறியுள்ளார்.
அ.தி.மு.க ட்விட்டர் பக்கத்தின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் ஓ.பி.எஸ் புகைப்படம் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது
எடப்பாடி பழனிசாமி: “அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகளுடன் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பொருட்களை அள்ளிக்கொண்டு செல்கிறார் என்றால் இவரெல்லாம் ஒரு தலைவரா கேவலமாக இருக்கிறது.” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
எடப்பாடி பழனிசாமி: “ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி; தனக்கு கிடைத்த பதவி மற்றவருக்கு கிடைக்கக்கூடாது என எண்ணுகிறார்; ரவுடிகளை அழைத்து வந்து கட்சியினரை ஓபிஎஸ் தாக்கியது கண்டிக்கத்தக்கது; அதிமுகவில் உயர்ந்த பதவியை வகித்த ஓபிஎஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்; காவல்துறையினர் ரவுடிகளுடன் சேர்ந்து கட்சியினரை தாக்கி உள்ளனர்; அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு சீல் வைத்துள்ளனர். நீதிமன்றம் மூலம் நியாயத்தை பெற்று, அதிமுக தலைமை அலுவலகத்தை மீண்டும் திறப்போம்” என்று கூறினார்.
ஒ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் திருமாறன் பேட்டி: “தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்; இன்றைய அதிமுக செயற்குழு கூட்டம் சட்டப்படி நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளார்
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் பகுதியில் நடந்த மோதலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிமுக தலைமை அலுவலகம் மயிலாப்பூர் தாசில்தார் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் “முதல் தகவல் அறிக்கை மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதை கணக்கில் கொண்டு, அதிமுக அலுவலகத்திற்கு சீல்” வைக்கப்பட:டள்ளது. இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாடி உரிய உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதிமுகவில் இருந்து ஒ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் பகுதியில் நடந்த மோதலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
அதிமுகவில் இருந்து ஒ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக தொடருவாரா ஓபிஎஸ் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவராக எஸ்.பி.வேலுமணி நியமிக்க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் சுயநலம் மிக்கவர்; தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்க கூடாது என்பது ஓபிஎஸ் எண்ணம் சொந்த கட்சியின் கூட்டத்தை நடக்க கூடாது என நினைத்தவர் ஓபிஎஸ் என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஓபிஎஸ் தர்ணா நடத்தி வருகிறார்.
அதிமுக பொருளாளர் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ட்வீட்டரில் வாழ்த்தியுள்ளனர்.
அதிமுக அலுவலகத்தில் மோதல் வெடித்த நிலையில், வருவாய் துறை அதிகாரிகள், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்க வந்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க முடிவு எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் செய்து, பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுகவை காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஒற்றை தலைமை தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளோம். அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என பொதுக்குழுவில் இபிஎஸ் உரையாற்றினார்.
என்னை அதிமுகவில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இபிஎஸ் , கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
அதிமுக கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் செய்து, பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலத்தில் இன்று காலை மோதல் வெடித்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
பொதுக்குழுவுக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியவர் ஓபிஎஸ். தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே உண்மையான பொதுச்செயலாளர்- திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். ஓபிஎஸ்-ஐ நீக்கும் தீர்மானத்தை இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கொண்டு வருவார் என கே.பி.முனுசாமி கூறினார்.
ஓபிஎஸ்க்கு இன்னொரு முகம் உள்ளது, நெருங்கி பழகியவர்களுக்கே அது தெரியும். உள்ளே ஒன்று வைத்து, வெளியே வேறொன்றை பேசுபவர் ஓபிஎஸ் என நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்நிலையத்தில் இபிஎஸ் தரப்பு புகார் அளித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலக கல்வீச்சு மோதல் சம்பவம் தொடர்பாக புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 'பாரத ரத்னா' விருதை, மத்திய அரசு வழங்ககோரி தீர்மானம் நிறைவேற்றம்.அதிமுக பொதுச் செயலாளரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம்.பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர் 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகியாக பதவி வகித்திருக்க வேண்டும்.
துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு, இனி துணை பொதுச்செயலாளர் என மாற்றம்.பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்.
4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றம்.
அதிமுகவின் இரட்டை தலைமை பதவிகளை பொதுக்குழு ரத்து செய்துள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட செயலாளர் வி.என்.ரவி. உள்பட பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, வானகரத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் வந்தடைந்தார் இபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் ஓபிஎஸ் வருகை தந்துள்ளார். மோதலுக்கு இடையே அதிமுக அலுவலகத்திற்குள் செல்கிறார் ஓபிஎஸ். ரத்த கறை படிந்த வாகனத்துடன் அதிமுக அலுவலகம் வந்தார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் வலுத்து வருகிறது. சாலையில் நிற்கும் கார்களை தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். அதிமுக தலைமை அலுவவலகத்தின் கதவை உடைத்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல். கற்களை வீசி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஓபிஎஸ். 9.15 மணிக்கு பொதுக்குழு கூடும் நிலையில், அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசித்த நிலையில் தலைமை அலுவலகம் புறப்பட்டார்.
ஒருபக்கம் பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட நிலையில், ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருப்பு உடையில் பவுன்சர்களை களமிறக்கி உள்ளது ஓ.பி.எஸ் தரப்பு. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
”ஐகோர்ட் தீர்ப்புக்கு பிறகு அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து சொல்கிறோம்”- வைத்திலிங்கம்
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு RFID தொழில்நுட்பத்துடன் அதிநவீன அடையாள அட்டை. போலி உறுப்பினர்களை தடுக்க அதிநவீன நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில்16 ஸ்கேனர்களுடன் தீவிர பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை மதித்தி நடப்போம் – திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வானகரம் புறப்பட்டார்.