தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தின் தேர்தலை பொறுத்தவரை, அதிமுக தலைமையில் தான் கூட்டணி எனவும், ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என தனி கட்சியை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிக்கொள்ளலாம் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "ஓ.பி.எஸ். தலைமையில் நடத்திய கூட்டத்தினால் அவர் விரக்தியில் இருப்பது அவரது பேச்சில் தெரிகிறது.

வேண்டும் என்றால், ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் தனி கட்சியை தொடங்கி நடத்திக்கொள்ளலாம். ஆனால், நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி நடைபெறும்", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil