/tamil-ie/media/media_files/uploads/2020/07/New-Project-2020-07-05T114443.883.jpg)
aiadmk mla arjunan tested covid-19 positive, coimbatore south constituency mla arjunan, அதிமுக, எம்எல்ஏ அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று, அர்ச்சுணன் எம்எல்ஏ, அம்மன் அர்ச்சுணன், அர்ஜுணன் எம்எல்ஏ, கொரோனா வைரஸ், covid-19 positive to arjunan mla,coronavirus affected mla numbers increased in tamil nadu, aiadmk, dmk, arjunan mla, mla arjunan
கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களும் அமைச்சரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது ஆட்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தந்தார். இதையடுத்து, திமுகவில் செய்யூர் எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு, செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிமுகவில் உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சரும் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன் ஆகியோருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவிலும் பொதுமக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ அர்ச்சுணன் குடும்பத்தினர் சமீபத்தில் மதுரைக்கு சென்று வந்துள்ளனர். அவர்களுக்கு நடைபெற்ற கொரோனா பரிசோதனை முடிவில் கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ அர்ச்சுணன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும், அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் எம்.எல்.ஏ அர்ச்சுணனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறு செய்யப்பட்டது.
அதிமுகவில் 1 அமைச்சரும் 4 எம்.எல்.ஏ-க்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல திமுகவில் 4 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இறந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 9 எம்.எல்.ஏ-க்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.