Tamil Nadu – AIADMK MLA Vijayabaskar Tamil News: புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த அந்த காளையை அடக்குவதற்காக ஜல்லிக்கட்டு வீரர்கள் ஆர்வத்துடன் முன்னேறிக் கொண்டு சென்றனர்.
அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வரும் வழியில் வைக்கப்பட்டிருந்த கட்டையின் மீது அமைச்சரின் காளை மோதியது. இதனால் நிலைக்குலைந்த காளை, அங்கேயே மயங்கி சரிந்தது. உடனடியாக அமைச்சரின் காளை மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
‘கொம்பன் காளை’ மரணம்
இதேபோல், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் புதுக்கோட்டை தென்னலூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன் காளை’ வாடிவாசல் கட்டையில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.

கொம்பன் காளை வாடி வாசலை விட்டு வெளியே வரும் போது சுவற்றில் மோதி களத்திலேயே மரணம் அடைந்தது. பின்னர் அந்த காளையை இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் தோட்டத்தில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி இறுதி சடங்கு செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil