/tamil-ie/media/media_files/uploads/2020/08/aiadmk-eps-ops-1.jpg)
AIADMK Steering Committee 11 Members: அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் வழிகாட்டும் குழுவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில் இபிஎஸ் அணியினர் 6 பேரும், ஓபிஎஸ் அணியினர் 5 பேரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை கட்சி அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதேசமயம் கட்சியின் 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுப் பட்டியலை இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்;
வழிகாட்டும் குழுவில் யார், யார்?
அதிமுக வழிகாட்டும் குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் விவரம் வருமாறு: 1. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 2. அமைச்சர் தங்கமணி 3. அமைச்சர் வேலுமணி 4. அமைச்சர் ஜெயகுமார் 5. அமைச்சர் காமராஜ் 6. அமைச்சர் சி.வி.சண்முகம் 7. ஜேசிடி பிரபாகர் 8. மனோஜ் பாண்டியன் 9. மோகன் 10. கோபாலகிருஷ்ணன் 11. மாணிக்கம்
இதில் முதல் 6 நபர்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும், அடுத்த 5 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும் கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.