Advertisment

3 முறை முதல்வருக்கு வந்த சோதனை: குடைச்சல் கொடுக்கும் சுயேச்சை ஓ.பி.எஸ்-கள்

OPS vs OPS vs OPS vs OPS vs OPS: 3 முறை தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக, அவரது பெயரில், அதாவது ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
aiadmk o panneerselvam namesake Ramanathapuram LokSabha polls 2024 Tamil News

மற்ற நான்கு ஓ.பி.எஸ்-களும் சுயேச்சைகள், அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர். மற்றொருவர் தெற்கு காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

O Panneerselvam | Edappadi K Palaniswami | Aiadmk | Ramanathapuram: அ.தி.மு.க-வின் உண்மையான தலைவராக தான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று போராடி மீண்டும் மீண்டும் தோற்றார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தற்போது அவர் தன்னை "உண்மையான ஓ.பி.எஸ்" என்பதை நிரூபிக்க போராடி வருகிறார். 

Advertisment

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். இதனால் அரசியல் கூடுதலாக சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க தலைமைப் பதவியை இழந்த ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார். அவருக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக, அவரது பெயரில், அதாவது ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 ஓ.பன்னீர்செல்வங்கள் (ஓ.பி.எஸ்) தேர்தல் களத்தில் உள்ளனர். 

இதில், மற்ற நான்கு ஓ.பி.எஸ்-களும் சுயேச்சைகள், அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர். மற்றொருவர் தெற்கு காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். ஒரு விஷயத்தில், அசல் ஓ.பி.எஸ் உடனான ஒற்றுமை ஆழமாக செல்கிறது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: OPS vs OPS vs OPS vs OPS vs OPS

“இந்த வேட்பாளர், 61, ஒட்சத்தேவரின் மகன்; முன்னாள் முதல்வரின் தந்தையின் பெயர் ஒட்டகர தேவர். தமிழில் பன்னீர்செல்வம் என்ற பெயர் பொதுவானது, ஆனால் ‘ஓ’வில் தொடங்கும் பெயர் அரிது. மற்ற பன்னீர்செல்வம் முறையே ஒச்சப்பன், ஒய்யாரம் மற்றும் ஒய்யாத்தேவரின் மகன்கள்” என்று ஒரு அதிகாரி கூறினார். வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான இன்றைக்குள் இன்னும் இரண்டு ஓ.பி.எஸ் பெயர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறலாம் என்றும் அவர் கூறுகிறார். 

தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் இறுக்கமான அரசியல் போட்டியில், தனது முதல் மக்கள் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், மற்ற பன்னீர்செல்வம் வாக்குகளை இழக்க வாய்ப்பு குறைவு தான். வாக்காளர்களை "குழப்பம்" செய்ய நாடக புத்தகத்தில் உள்ள பழமையான தந்திரங்களில் ஒன்றான இந்த ஓ.பி.எஸ் ஃபார்முலாவை அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் கையில் எடுத்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ராமநாதபுரம் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையிலான தேவர் சமூகம் மக்கள் உள்ளனர். இந்த சமூகத்தைச் சேர்ந்தவராக ஓ.பி.எஸ் உள்ளார். ஆனால், இந்தத் தொகுதியில் கட்சி தொண்டர்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. 

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் அரசியல் பிரிவான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியாகவும், ராமநாதபுரத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராக த.மு.மு.க-வின் நவாஸ் கனியும் போட்டியிடுகிறார்.

2016 டிசம்பரில் அ.தி.மு.க.வின் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, முடிவில்லாத துரதிர்ஷ்டத்திற்குப் பலியாகியிருக்கிறார் ஒரிஜினல் ஒ.பி.எஸ். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற அமைச்சராக இருந்த அவரிடம், ஜெயலலிதா சிறைவாசம் சென்ற போது, 3 முறை முதல்வர் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றார். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் முழு நேர முதல்வராகப் பொறுப்பேற்றபோது, ​​அவரது வீழ்ச்சி படுமோசமாக இருந்தது. 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளரான வி.கே.சசிகலாவுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கை, கட்சி பிளவுபடவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியடையவும் வழிவகுத்தது. 

2017 ஆம் ஆண்டு மத்தியில் சசிகலாவையும் அவரது அண்ணன் மகன் டிடிவி தினகரனையும் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்ற, தர்மயுத்தம் முடிந்து எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பி.எஸ் கைகோர்த்தபோது அவர் ஓரளவுக்கு மீண்டு வந்தார். ஆனால், அதற்காக அவர் முதல்வர் பதவியை இ.பி.எஸ்-யிடம் பறிகொடுத்தார். அதன்பிறகு, இ.பி.எஸ் பலம் பெற்ற நிலையில், துணை முதல்வராக ஓ.பி.எஸ் மீண்டும் இரண்டாவது இடத்தில் இருந்தார். 

புகழ் பெற்ற அரசியல்வாதியாக திகழ்ந்த ஓ.பி.எஸ், அந்த இடத்தில் இருந்து வெகுதூரம் கீழே இறங்கி விட்டார். தற்போது அவர் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக, அவர் அங்கம் வகிக்கும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பி.எஸ்-யின் சொந்த மாவட்டமான தேனியில் போட்டியிடும் டிடிவி தினகரனும் இடம் பெற்றுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Aiadmk O Panneerselvam Edappadi K Palaniswami Ramanathapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment