தூய்மை பணியாளர்கள் மீது வழக்கு... பின்னணியில் சேகர் பாபு: அ.தி.மு.க பரபர தகவல்

"தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த தேன்மொழி யார் தெரியுமா? தி.மு.க சென்னை கிழக்கு மாவட்டநிர்வாகி." என்று அ.தி.மு.க ஐ.டி விங் தெரிவித்துள்ளது.

"தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த தேன்மொழி யார் தெரியுமா? தி.மு.க சென்னை கிழக்கு மாவட்டநிர்வாகி." என்று அ.தி.மு.க ஐ.டி விங் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
AIADMK On Chennai conservancy workers protest Madras High Court Tamil News

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தது யார் என்பது தொடர்பான பரபர தகவலை அ.தி.மு.க ஐ.டி விங் வெளியிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்​தரம் உள்ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தியும்​ 2 மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​.யூ.எல்.​எம் பிரிவைச் சேர்ந்தவர்​கள் 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் மேற்கொண்டனர். அவர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்றுப் பேச்​சு​வார்த்​தை​கள் தோல்​வி​யில் முடிந்தன.

Advertisment

இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களைக் கலைந்து செல்லுமாறு காவல் துறை புதன் கிழமை மாலை அறிவுறுத்தியது.

மேலும், நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், யாரும் கலைந்து செல்லவில்லை. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போலீஸார் கைது நடவடிக்கையில் இறங்கினார்கள். நள்ளிரவு 11.45 மணியளவில் தூய்மைப் பணியாளர்களை போலீஸார் குண்டுகட்டாகத் தூக்கி கைது செய்தனர். அப்போது போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள், ஆதரவாக போராடியவர்கள் உள்பட சுமார் 950 பேரை கைது செய்து 30 மாநகர அரசு பேருந்துகள் மூலம் சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி, தாம்பரம் உள்பட 12 மண்டபம் மற்றும் சமூக நலக்கூடங்களுக்கு போலீஸார் அழைத்துச் சென்று தங்க வைத்தனர். கைது செய்து மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தூய்மை பணியாளர்களை இன்று காலை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்தனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு மேல் மண்டபம் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க பரபர தகவல் 

Advertisment
Advertisements

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தது யார் என்பது தொடர்பான பரபர தகவலை அ.தி.மு.க ஐ.டி விங் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க ஐ.டி விங் அதன் எக்ஸ் தள பக்கத்தில், "தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த தேன்மொழி யார் தெரியுமா? தி.மு.க சென்னை கிழக்கு மாவட்டநிர்வாகி. இவர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் “தனம் சாரிடபிள் டிரஸ்ட்” யாருடையது தெரியுமா? பணி நிரந்தர வாக்குறுதியை நாங்கள் கொடுக்கவே இல்லை என பச்சை பொய் சொன்ன அமைச்சர் சேகர்பாபு உடையது. [துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்]

இப்போது தெரிந்ததா தூய்மைப் பணியாளர்களை வெளியேற்றியது யார் என்று? யாருக்கும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக போராடி வந்த எளிய மக்களின் மீது கரிசனம் கொள்ளாமல் வெறுப்பை உமிழ்ந்து, காட்டில் இரையை வேட்டையாடும் மனோபாவத்தோடு , நரி தந்திரம் செய்து, அவர்களை நடுஇரவில். காவல்துறையை வைத்து அடித்து வெளியேற்றியுள்ளது திமுக. தூய்மைப் பணியாளர்களை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு, அவர்களை இடையூறாக கருதிய இந்த திமுக ஆட்சியை மக்கள் குப்பையில் வீசத் தான் போகிறார்கள். அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Chennai Dmk Minister P K Sekar Babu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: