அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று ஒ.பன்னீர்செல்வம், நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் வீட்டுக்கு விசிட் அடித்ததும், அவரது அம்மா காலில் விழுந்து ஆசீாவாதம் வாங்கியதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிககள் ஆதரவுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒ.பி.எஸ் உள்ளிட்ட பலரையும் கட்சியில் இருந்து நீங்கிய இபிஎஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனாலும் அதிமுகவின் ஒருங்கினைப்பாளர் மற்றும் கட்சியின் பொருளாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரையும் அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஒ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டு தனது ஆக்ஷனை தொடங்கினார். இந்த நிகழ்வுகள் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது.
இதனிடையே செஸ் ஒலிம்பியாட் மற்றும் அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடியை ஒபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்தித்தனர். இதில் டெல்லி மேலிடத்தின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பாக அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில், ஒபிஎஸ் இன்று திடீரென நடிகரும் முன்னாளம் எம்எல்ஏவுமான எஸ்வி.சேகரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
தமிழகத்தில் 3 முறை இடைக்கால முதலமைச்சராக இருந்தவர்.@ISUPPORTOPS @OfficeOfOPS
பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நட்புக்கு மரியாதை கொடுக்கும் ஒரு நல்ல மனிதர் திரு ஓபிஎஸ் அவர்கள். வீரமும் விவேகமும் வெற்றி பெறும் என உணர்ந்தவர். பல வெற்றிகளை பெற ஆண்டவனை வேண்டுகின்றேன். 🙏🇮🇳🙏 pic.twitter.com/JrAe3hfGVY— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) July 31, 2022
தற்போது பாஜகவில் இல்லை என்றாலும் டெல்லி மேலிடத்தில் தொடர்பில் இருந்து வரும் எஸ்வி சேகர், தனது 70 வயதை கடந்ததை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பீமரத சாந்தி ஹேமம் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் பிரபமுகர்கள் வருகை தந்திருந்த நிலையில், ஹோமம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு ஒபிஎஸ் எஸ்வி சேகர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த சந்திப்பின்போது 70 வயதை கடந்த எஸ்வி சேகருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்த ஒபிஎஸ், பரிசுப்பொருள் ஒன்றையும் கொடுத்தார். தொடர்ந்து எஸ்வி.சேகரின் தாயார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற ஒபிஎஸ் அதிமுக அரசியல் பிளவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிமுகபிளவு தொடர்பாக தனக்கு டெல்லி ஆதரவு வேண்டும் என்பதற்காக ஒபிஎஸ் இந்த சந்திப்பபை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.