கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பாபா இல்லத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ் கூறுகையில்,
நேற்று முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ் அவர்களை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அம்மாவால் விரட்டி அடிக்கப் பட்டவர் முனுசாமி. அவருக்கு கட்சியில் 2 ம் தலைவராக வாய்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்.
எடப்பாடியே முனுசாமிக்கு எதிராக பேசிய போது ஆதரவு கொடுத்தவர் ஓ.பி.எஸ். ஓ பி எஸ் அதிமுகவில் உழைக்கவில்லை என்று சொல்கிறார். ஆனால் அம்மா ஓ.பி.எஸ்.சை தான் செய்த பாக்கியம் என்றார். விசுவாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை அம்மாவிடம் வாங்கியவர் ஓ.பி.எஸ். அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி யோக்கியதை கிடையாது.
வருமான வரி சோதனையின் போது தொண்டர்களை அடியாட்கள் போன்று வீட்டின் முன்பு குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 1000 கோடி செலவு செய்து பதவி வரவில்லை என்று எடப்பாடி, முனுசாமியை வைத்து பேசுகிறார். அதிமுகவில் தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர்.
இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி. கோடநாட்டில் கொலை கொள்ளை நடந்துள்ளது. அம்மாவின் வீட்டிற்கு காவல் போடாதவர் எடப்பாடி. அம்மாவின் வீட்டை தனியார் வீடு என்றவர் எடப்பாடி.எடப்பாடி தலைமையில் கடந்த 4 அரை வருடங்களில் செய்த தவறுகளை பட்டியலிட்டு வெளியிடுவோம்.
நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விரைவில் மற்றவர்கள் மீதான பட்டியலை வெளியிடுவோம் என கூறியுள்ளார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது போன்ற செயல்கள் எல்லாம் நடைபெறுகிறது. வங்கியில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பாதுகப்பாக பார்த்துக் கொண்டவர் ஒ.பி.எஸ் தான்.
நீதிமன்றம் ஜீலையில் நடத்திய கூட்டம் முறையானது அல்ல என்றுள்ளது. தளவாய் சுந்தரம் கட்சி பைலாவை முதலில் படிக்க வேண்டும். கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லை. ஓபிஎஸ் ஒரு முதலமைச்சர் ஆக இருந்து மற்றொருவரை முதலமைச்சராக அறிவித்தவர்.
கட்சியின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி. அம்மாவின் சீட்டுக்கு துரோகம் செய்பவர் எடப்பாடி. ஓ.பி.எஸ் தீர்ப்புக்கு பின் கட்சி அலுவலகத்துக்குள் செல்வார். கட்சி தலைவரும் ஓ பி எஸ் தான் பொருளாளரும் அவர் தான். சசிகலா கட்சியின் உறுப்பினர். எப்பவும் போல இருப்பார்.
அதிமுக அழிந்து விட கூடாது என நினைப்பவர் பிரதமர். பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் எடப்பாடி. பாஜக அதிமுக விவகாரத்தில் தலையீடு செய்வதில்லை. யாரும், எந்த கட்சியும் சமரசம் செய்யும் அளவிற்கு அதிகமுகவினர் இல்லை. கொடி கட்சி சின்னம் அனைத்தும் ஓ பி எஸ் தலைமையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil