AIADMK Candidate List For Local Body Election : ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27.12.2019, 30.12.2019 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதையொட்டி அஇஅதிமுக தனது முதல் வேட்பாளர் பட்டிலை வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதன் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொதுவாக, தேர்தல்களில் வேட்பாளர்கள் பட்டியலை மற்ற கட்சிகளை விட முன்னணியில் வெளியிடும் பழக்கம் அதிமுகவிற்கு உண்டு. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த நிகழ்வையும் பார்க்க முடிகிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக கட்சி துணை செயலாளர் திரு.LK.சுதீஷ், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சந்தித்தார்.
முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் திரு.கருணாஸ் MLA நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தனது கட்சியின் முழு ஆதரவை நேரில் சந்தித்து தெரிவித்தார்.