கடந்த ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக அ.தி.மு.க-வின் தலைவர் என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.
குறிப்பாக அ.தி.மு.க-வின் வழக்கமான என்.டி.ஏ கூட்டணி கட்சியான பா.ஜ.க, சில மாதங்களாக அ.தி.மு.க உட்கட்சி பூசல்களில் பெரும்பாலும் அவரது பக்கம் இருக்கிறது அல்லது நடுநிலை வகிக்கிறது. இருப்பினும், இருப்பினும், தமிழ்நாட்டில் கணிசமான எம்.பி.சி வன்னியர் சமூக வாக்குகளைக் கொண்ட என்.டி.ஏ கூட்டணியின் முக்கியக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, இப்போது அவரை குறி வைத்திருப்பதாகத் தெரிகிறது. அ.தி.மு.க-வின் உட்கட்சி நெருக்கடி குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனக் கருத்துக்களை தெரிவித்ததால், அக்கட்சி தி.மு.க கூட்டணியில் சேருவதற்கான முயற்சிகள் குறித்த வதந்திகளுக்கு இடையே இந்த வார்த்தைப் போர் தொடங்கியது.
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வி.கே சசிகலா தலைமையில் அ.தி.மு.க நான்காக உடைந்துள்ளது என்று சமீபத்தில் நடந்த பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துகளை ஊடகங்களில் அக்கட்சியினர் உறுதியாக முன்வைத்ததை அடுத்து, அ.தி.மு.க-வின் தலைவர்கள் கோபமடைந்து, மாநில அரசியலில் பா.ம.க காலூன்றுவதற்கு ஒரே காரணம், மறைந்த அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா கூட்டணியில் இடம் அளித்ததுதான் என்று கூறினார்கள்.
அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், “பா.ம.க-வுக்கு முகவரி கொடுத்து, ஏணியில் ஏற்றி விட்டது யார், மேலே ஏறிய பிறகு, ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கக் கூடாது” என்று கூறினார்.
1998, 2009 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களிலும், 2001 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க-வுடன் பா.ம.க வைத்துள்ள நீண்ட உறவைப் பற்றி அவர் பேசினார். மேலும், பா.ம.க கூட்டணியில் அங்கம் வகித்தாலும், 2021-ல் ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டது.
பா.ம.க-வை அ.தி.மு.க கூட்டணிக்குள் கொண்டு வந்து 4 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தவர் ஜெயலலிதா என்று ஜெயக்குமார் கூறினார். 2001-ல் நாங்கள் அவர்களுக்கு 27 தொகுதிகளை கொடுத்தோம், பா.ம.க 20 இடங்களை வென்றது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், அதிமுகவைக் கேவலப்படுத்தாமல் சொந்தக் கட்சியைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஜெயக்குமாரின் கருத்துக்கு பதிலளித்த பா.ம.க மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கே.பாலு, “அ.தி.மு.க பிளவுபட்டிருப்பது உண்மைதானே? இன்று அ.தி.மு.க., பிளவுபட்டுள்ளது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்” என்று கூறினார். 2019 இடைத்தேர்தலுக்குப் பிறகு, ஆளும் கட்சிக்கு சிறிதளவு பெரும்பான்மை இருந்தபோதிலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடித்ததற்கு பா.ம.க-தான் காரணம் என்றும் அவர் கூறினார். திமுகவிடம் 13 இடங்களை இழந்தாலும், அ.தி.மு.க 9 இடங்களில் வெற்றி பெற்றதற்கு பா.ம.க வாக்குகள் முக்கியப் பங்கு வகித்தது என்று பாலு கூறினார்.
தற்போது இரு கட்சி தலைவர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் வார்த்தைப் போரால் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படாது என அ.தி.மு.க, பா.ம.க தலைவர்கள் கருதுகின்றனர். “நாங்கள் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது. இதனால், கூட்டணி உடைந்துவிடும் என்று அர்த்தமல்ல. தொல் திருமாவளனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க கூட்டணியில் இருக்கும் வரை தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம் பெறாது என அ.தி.மு.க மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். வி.சி.க தலித் மற்றும் தமிழ்த் தேசியவாதக் கட்சி. வி.சி.க தமிழ்நாட்டில் பா.ம.க உடன் முரண்பாட்டைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பா.ம.க எளிதில் வெளியேறி 2024 பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட முடியும் என்று பா.ம.க மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கு இதுவே சிறந்த வழியாகும் என்று அவர் கூறினார். அன்புமணி இந்த யோசனையை விரும்பினாலும், அவரது தந்தை, பாமக நிறுவனர் ராமதாஸ், அரசியலில் இதுபோன்ற சாகசமான வழக்கத்திற்கு மாறான நகர்வுகளை விரும்பமாட்டார் என்று அந்த தலைவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”