தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் 'அந்த தியாகி யார்?’ எனக் குறிப்பிட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திருச்சியின் முக்கிய சாலைகளிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அதில், ‘டாஸ்மாக் ஊழல்- பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ரூ.1,000 கோடி, உரிமம் வராத பார்கள் மூலம் ரூ.40,000 கோடி ஊழலா? என மக்கள் கேள்வி என்றும், 1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ரூ.1,000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?’ என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியின் பிரதான சாலைகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு நிலவுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்.