தமிழ்நாடு முழுவதும் காய்கறி விலை உயர்வு அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றன.
Advertisment
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு, அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். இதில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏவும் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பினார்.
அவர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் ஒரு குடும்பம் ரூ.10000 வருமானம் இருந்தால் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் 20 ஆயிரத்துக்கு மேல் வருமானம் வந்தாலும் குடும்பங்கள் தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் விலைவாசி உயர்வு காய்கறிகள் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகு அனைத்து பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து, எடப்பாடி யாருக்கு துரோகம் செய்த யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது, அதற்கு உதாரணம் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிதான்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “காய்கறிகள் விலை உயர்வை சுட்டிக் காட்டும் வகையில், பெண்கள் வெண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மாலையை அணிந்திருந்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“