சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அதிமுக சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரருமான பொன்மணி பாஸ்கர் கலந்துகொண்டார்.
அப்போது அவர், “ஒரு மதுபான பெட்டிக்கு ஏற்றி இறக்கும் கூலியாக ரூ.10 வசூலிக்கப்பட்டு அதில் ரூ. 6 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செல்கிறது, விஞ்ஞானபூர்வமான ஊழலையும் தாண்டி கொடுமையான ஊழல் நடைபெற்று வருகிறது.
தனக்கு மதுபான சரக்கு வாகன ஒப்பந்தத்தை நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட நான் கண்ணீர் விட்டு அழுதது
முதல்வருக்கு கேட்கவில்லை.
முனீஸ்வரர்க்கு கேட்டு விட்டது. கும்மிடிப்பூண்டியில் சபரீசனும், 2G வழக்கில் சம்பந்தப்பட்ட சச்சேனாவும் இணைந்து டாபிக்கல் டிஸ்லரீஸ் என்ற புதிய மதுபான ஆலையை அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளனர்.
இனி எந்த மதுபான ஆலைகளுக்கும் ஆர்டர் கிடைக்காது. 500 மதுபான கடையை மூடுவதாக கூறி 3 நாள்களில் 30 கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளனர்” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“