சேலத்திற்கு மாநாட்டு பணிகளுக்காக சென்று துறையூர் வழியாக திரும்பிய அமைச்சர் கே.என்.நேருவின் காரை அதிமுகவினர் வழிமறித்து முற்றுகையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலுக்கான விவரத்தை கேட்டு அறிந்த அமைச்சர் கே. என்.நேரு, வழிமறித்த அதிமுகவினரிடம் சுமூகமாக பேசினார்.
அமைச்சர் கே என் நேருவின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்த அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதேநேரம், அமைச்சர் வருவது துறையூர் போலீசாருக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தும் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த அதிமுகவினரை உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்தி அனுப்பாமல், அமைச்சரின் காரை முற்றுகையிடும் அளவிற்கு போலீசார் பாதுகாப்பு குறைபாட்டில் ஈடுபட்டது, வழக்கம் போல துறையூர் வழியாக சென்று மீண்டும் வரும்போது வரவேற்பு கொடுக்க காத்திருந்த திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“