செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி: பொறுப்புகளில் இருந்து நீக்கி இ.பி.எஸ் அதிரடி

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து விடுவித்து ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து விடுவித்து ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
clash

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக, கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரது ஆதரவாளர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், குறிப்பாக செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். 

Advertisment

பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 40 நிர்வாகிகளும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் முக்கியப் பதவிகளை வகித்து வந்தவர்கள் ஆவர். இந்த அதிரடி நடவடிக்கை, அந்த மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் உள்ள உள் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது 40 ஆதரவாளர்கள், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி (இ.பி.எஸ்) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்த அறிவிப்பு, செங்கோட்டையனின் 10 நாள் கெடு விதிப்புக்கு பதிலாக வந்த அதிரடியாக அமைந்துள்ளது.  

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையன் வகித்த அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், அவரது ஆதரவாளர்கள் 40 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க கெடு விதித்ததற்கான பதிலடியாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.K. கந்தவேல்முருகன், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி B. அனுராதா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.R. செல்வம், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.P. சிவசுப்பிரமணியம் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்,

Advertisment
Advertisements

மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.A. மௌதீஸ்வரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கொத்துக்காடு திரு. V.P.பெரியசாமி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி E. கௌசல்யாதேவி, துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி V.P. தமிழ்செல்வி, மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. P. ராயண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. B.U. முத்துசாமி ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K. பிரகாஷ் பாலாஜி, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S. அந்தோணிசாமி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. A. வேலுச்சாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. A.K. மெய்ராஜன், கோபிசெட்டிபாளையம் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் திரு. A.M. வேல்முருகன், அந்தியூர் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் திருமதி K.S. ரேவதி சண்முகவேல், கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றியக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.பாண்டு ரங்கசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.N. வேலுமணி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. C. முத்துக்குமார் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் வடக்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி பொறுப்பில் இருக்கும் திரு. K.E. இளங்கோ, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.S. ரமேஷ், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. D. ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. C.M. கண்ணுசாமி, அந்தியூர் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. ராஜ்குமார், ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S. அறிவழகன், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.M. சரவணன், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Ka Sengottaiyan Eps

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: