/tamil-ie/media/media_files/uploads/2021/07/e-madhusudhanan-1200.jpg)
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மதுசூதனன். 1991 சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டு வென்று ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார். தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தந்த அதிமுக தலைவர்களுள் முக்கியமானவர் மதுசூதனன்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதுசூதனன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us