எங்களுடைய திட்டங்களுக்கு உரிமை கோராதீர்கள்; திமுகவுக்கு அதிமுக கண்டனம்!

பிரதமர் மோடி புதன்கிழமை தொடங்கி வைக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும், மீதமுள்ள தொகைய தமிழக அரசாலும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படவுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் முந்தைய அதிமுக அரசின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது, ஆனால், அதற்கு தற்போது ஆளும் திமுக உரிமை கோருகிறது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கே.பழனிசாமி கூறுகையில், இந்த நிறுவனங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது என்றும், அதில் தானும் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் புதன்கிழமை தொடங்கி வைக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும், மீதமுள்ள தொகை தமிழக அரசாலும் வழங்கப்பட்டுள்ளன. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “அம்மா அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அதற்கான நிதியையும் ஒதுக்கியது” என்று தெரிவித்துள்ளார்.

அவர் 11 மாவட்டங்களிலும் பூமி பூஜை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, ​​​​மத்திய சுகாதார அமைச்சரும் மற்றவர்களும் கலந்துகொண்டனர். அப்போதைய மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கலந்துகொண்டதைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார்.

“ஜனவரி 12ம் தேதி பிரதமர் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைக்கிறார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, அம்மா அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு மருத்துவக் கல்லூரிகளை வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். இது கூடுதலாக 1,450 மருத்துவ இடங்களை உருவாக்க வழிவகுத்து கிராமப்புற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை அவருடைய அரசால் அறிவிக்கப்பட்டது.

“ஆனால் இதை திமுக அரசு தான் இந்த கல்லூரிகளை கொண்டு வந்ததாக காட்டுவது போல் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிப்பதாக எனக்கு தெரியவந்தது. இதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறினார்.

கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், சென்னை உயர் நீதிமன்றத்தை முதலில் அணுகியது அதிமுகதான் என்றும், அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான திமுகவும் பின்னர் பாமகவும் சென்றது என்று கூறினார்.

ஆனால், இடஒதுக்கீடு பிரச்சனையில் போராட்டத்தை முன்னின்று நடத்தியது போன்ற தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

முதலீடு மற்றும் வேறு சில துறைகளில் உள்ள நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, அவை திமுக தனது அரசாங்கத்தின் முயற்சியின் பலன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதன் மீது திமுக உரிமை கோரி பெயிண்ட் அடிக்க முயற்சிக்கிறது என்று கூறினார்.

மேலும், “இனிமேலாவது இந்த அரசு மற்றவர்கள் பெற்ற குழந்தைக்கு உரிமை கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, தமிழக மக்களின் நலனுக்காக சொந்தமாக திட்டங்களை கொண்டு வர வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாகக் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk tells to dmk dont claim credit for our efforts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com