Advertisment

டிங்கிரிடியாலே டிங்கலே… பாடல் பாடி ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Former AIADMK Minister Jayakumar sings his signature song at the protest site against dmk video goes viral Tamil News: "டிங்கிரிடியாலே டிங்கலே… ஸ்டாலின் ஆட்சி டிங்கிரி டிங்காலே… தலையில் துண்டு போட்டுக்கணும் தங்கமே தில்லாலே…" எனப் பாடல் பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

author-image
WebDesk
New Update
AIADMK to protest against dmk Tamil News: admk Minister Jayakumar sings song at the protest site

AIADMK to protest against Dmk Tamil News: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலைமை தாங்கி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

Advertisment

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைப்பது, அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

பாடல் பாடி ஆர்ப்பாட்டம் நடத்திய அமைச்சர் முன்னாள் ஜெயக்குமார் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

கழுத்தில் காய்கறி, மளிகைப் பொருள்களை மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்துகொண்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "டிங்கிரிடியாலே டிங்கலே… ஸ்டாலின் ஆட்சி டிங்கிரி டிங்காலே… தலையில் துண்டு போட்டுக்கணும் தங்கமே தில்லாலே…" எனப் பாடல் பாடினார். இதற்கு அருகில் இருந்த அதிமுக தொண்டர்கள் கூட சேர்ந்து பாடினர். அதோடு 'அண்ணன் DJ வாழ்க' எனவும் உற்சாகக் குரல் எழுப்பினர்.

publive-image

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்துசெய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் நீட் காரணமாக ஐந்து மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

அராஜகம், அடாவடி செய்து கடைகளில் மாமூல் வசூலிக்கிறார்கள். கோவையில் 10ஆம் வகுப்பு மாணவி படுகொலைசெய்யப்பட்டது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பைத் தரவில்லை.

மழை நின்ற பிறகும் பல இடங்களில் இன்னும் நீர் வடியவில்லை. முறையான நடவடிக்கை மேற்கொள்ளாததால் மு.க. ஸ்டாலின் தொகுதியிலேயே நீர் இடுப்பளவு தேங்கியது. பொய் வழக்கு மூலம் அதிமுகவை அழிக்க நினைப்பது பகல் கனவு. கருணாநிதி காலத்திலும் இதேபோலதான் செய்தார்கள்.

எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது எனக் கருத்துரிமையைப் புறக்கணிக்கிறது திமுக அரசு. திமுகவிற்கு ஒத்தூதினால்தான் கருத்துச் சுதந்திரம் என்கிறார்கள். திமுகவை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. நடப்பது குடும்ப ஆட்சி, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தாலும், நிழல் முதலமைச்சராக உதயநிதி, சபரீசன்தான் என்பது ஊரறிந்த உண்மை. உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என திமுகவில் சிலர் கூறுகின்றனர். எதுவும் நடக்கலாம். ஆனால் உதயநிதி அமைச்சரானாலும் நல்லது நடக்காது" என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Protest Dmk Admk Tamilnadu News Update Tamilnadu News Latest D Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment