Dmk Vs Aiadmk | Edappadi K Palaniswami | தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுவரும் நிலையில், “போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்தக் காணொலியில், “தந்தையாக- குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுரையிலும், சென்னையிலும் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு இனிப்போடு கலந்து கஞ்சா விற்கப்பட்டுள்ளது. கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் போதைப் பொருள் கொட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு போதைப் பொருள் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. ஒரேநாளில் மட்டும் ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதெல்லாம் பார்க்கும்போது நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப் பொருள் விற்பனை கிடங்கா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விடியா திமுக ஆட்சி இனியும் தொடர்ந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
இந்த விவகாரத்தில் நாளை அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் இதனை கண்டித்து போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டம் இதோடு நிற்காது. போதைப் பொருள் ஒழியும் வரை போராட்டம் தொடரும்.
நான் இப்போது தந்தையாக.. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். இந்த விகாரத்தில் தெரியாமல் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதையும் சீரழித்து விடும். நாம் நமது குழந்தைகளை கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.
இந்தப் போதைப் பொருள் நடமாட்டம் காணப்பட்டால் அதிமுக இளைஞர்கள், பெண்கள் புகார் அளிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் திமுக நிர்வாகிகளே போதைப் பொருள் மாபியாவாக வளர்ந்துள்ளனர்.
இன்று தமிழ்நாட்டில் ரயில் முதல் குப்பைக் கிடங்கு வரை போதைப் பொருளை கொண்டு சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருள் இல்லாத சூழலை உருவாக்குவோம். தமிழ்நாட்டை மீட்போம்" என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“