Former AIADMK minister-c-vijayabaskar | chennai-high-court: 2011 முதல் 2021 வரை நடந்த அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர். அவர் மீது கேரளாவை சேர்ந்த ஷர்மிளா என்பவர் ஒரு புகாரை அளித்திருந்தார். அதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பி அளித்துவிட்டு, மீதி பணத்தை தராமல் மிரட்டுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, ஷர்மிளாவிற்கு எதிராக விஜயபாஸ்கர் தரப்பில் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், அவர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் முடிவில், விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க கேரளாவை சேர்ந்த ஷர்மிளாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் சி.விஜயபாஸ்கர் குறித்து ஷர்மிளா பதிவிட்ட பதிவுகளை நீக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் விஜயபாஸ்கர் என்றும், அவர் மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“