/indian-express-tamil/media/media_files/8prIu1HfaSnRsA9BJkn4.jpg)
திருச்சியில் நாளை அதிமுக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
Tiruchirapalli | Aiadmk | தமிழகத்தில் பெருகி உள்ள போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், துணை போகும் திமுக அரசைக் கண்டித்தும் திருச்சி மாவட்டத்தில் நாளை அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடிய பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனைக்கிணங்க, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ள விடியா திமுக அரசை கண்டித்து, நாளை 12-03-2024 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று, காலை 10.00 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட லால்குடி நகரம், பூவாளூர் பேரூர், புள்ளம்பாடி பேரூர், கல்லக்குடி பேரூர் மற்றும் துவாக்குடி நகர கழகம், கூத்தைப்பார் பேரூர், பொன்மலை பகுதி, அரியமங்கலம் பகுதி, திருவெறும்பூர் பகுதி, மணப்பாறை நகரம், பொன்னம்பட்டி பேரூர் ஆகியவற்றில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
அதுசமயம் பொதுமக்கள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்டவாறு திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் அதிமுகவினருக்கு விடுத்துள்ள அழைப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.