New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Karti-P-Chidambaram.jpg)
சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம்
நானும் எனது தந்தையும் எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மக்களவை எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வெற்றி பெறாது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நாட்டில் வரி விதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என எண்ணுபவன் நான். என்னைப் பொறுத்தவரை தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும்.
நாட்டில் கிட்டத்தட்ட ஒரு 5 கோடி பேர்தான் நேரடியாக வரி கட்டுகிறோம். அதேநேரம் நானும் எனது தந்தையும், எல்லா விஷயத்திலும், அதாவது பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக, சித்தாந்த ரீதியாக, விளையாட்டு ரீதியாக ஒத்துப்போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நான் மீண்டும் சொல்கிறேன் தனி நபர் மீதான வருமான வரி குறைப்பை நான் வரவேற்கிறேன். மதுரை எய்ம்ஸ் இன்னமும் தொடங்கப்படவில்லை. ராமேஸ்வரத்தில்தான் மருத்தவ படிப்புகள் நடைபெறுகின்றன.
அமைச்சர் குஜராத்தை சேர்ந்தவர் அவருக்கு ராமேஸ்வரத்துக்கும் மதுரைக்கும் வித்தியாசம் தெரியவில்லை” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் இடைத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா நடத்தப்படுகிறதே? திமுக முழு பலத்தையும் காட்டுகிறதே? எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கார்த்தி ப சிதம்பரம், “அப்படியெல்லாம் எதுவும் இல்லை. முதல் அமைச்சராக பின்பு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அமைச்சர்கள் வந்துள்ளனர். இதில் தவறேதும் இல்லை” என்றார்.
இதையடுத்து அதிமுக வெற்றிப் பெறும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “எது? நாக்பூர் டெஸ்டிலா? நாக்பூருக்கும் அவர்களுக்கு உறவு உண்டு. அதனால் கேட்டேன் என்றார்.
தாமரை மலருமா? என்ற கேள்விக்கு, “எனக்கு தாமரை பிடிக்காது, ரோஜாதான் பிடிக்கும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.