/indian-express-tamil/media/media_files/PhSUNnpLEO53BEzkPryl.jpg)
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்; சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ராஜேஷ் குமார் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி இருந்து வந்தார். அழகிரி விரைவில் மாற்றப்படுவார் என்று கடந்த பல காலமாகவே தகவல் பரவி வந்தது.
இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக காங்கிரஸில் தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, ராஜேஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Hon'ble Congress President has appointed Shri K. Selvaperunthagai as the President of Tamil Nadu Pradesh Congress Committee with immediate effect.
— INC Sandesh (@INCSandesh) February 17, 2024
Hon'ble Congress President has also approved the proposal of the appointment of Shri S. Rajesh Kumar as the CLP Leader of Tamil Nadu. pic.twitter.com/HasWMkkMkS
தமிழக காங்கிரஸ் தலைவராக என்னை நியமித்துள்ளது ஆச்சரியம் தந்துள்ளது. தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன். தலைமையின் நம்பிக்கை வீண்போகாமல் பணியாற்றுவேன். சமூக நீதி மீது இந்தியா முழுவதும் நம்பிக்கை உள்ள இயக்கம் காங்கிரஸ். வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்போம் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.