ரூ 20,000 கோடி செலவில் கோவை, மதுரை மெட்ரோ ரயில்: நிதி உதவி வழங்க ஆசிய வங்கி ஆய்வு

மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பூர்வாங்க கணக்கெடுப்பை ஏ.ஐ.ஐ.பி வங்கி நடத்துகிறது

மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பூர்வாங்க கணக்கெடுப்பை ஏ.ஐ.ஐ.பி வங்கி நடத்துகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa

மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள நிலையில், அதற்கான நிதியை கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் இன்றும், நாளையும் நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.  

Advertisment

பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கி  (AIIB) மதுரை மற்றும் கோயம்புத்தூரில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது, தற்போது சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உருவாக்கியுள்ளது. ஏ.ஐ.ஐ.பி குழு மதுரையில் உத்தேச மெட்ரோ வழித்தடங்களை நேரில் ஆய்வு செய்கிறது. 

மதுரையில் உத்தேச மெட்ரோ வழித்தடங்களை ஏஐஐபி குழு புதன்கிழமை ஆய்வு செய்கிறது. இந்த குழு வியாழக்கிழமை கோவையில் ஆய்வு நடத்த உள்ளது. 

சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (டிபிஆர்) மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. 

Advertisment
Advertisements

அவிநாசி மற்றும் சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய கோயம்புத்தூர் திட்டத்திற்கு, 10,740 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும் மதுரை திட்டம் ரூ.11,368 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு டிபிஆர்களும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

மெட்ரோ ரயில் திட்டங்களை ஆய்வு செய்ய ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நேற்று சென்னை வந்தனர். இதையடுத்து சென்னை வந்துள்ள பிரதிநிதிகள் இன்று மற்றும் நாளை ஆய்வு செய்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: