/indian-express-tamil/media/media_files/l6f58cCH5ANAlFY7zN5b.jpg)
கோவை மாவட்டத்தில் அவிநாசி சாலை மற்றும் சக்தி சாலை ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அவிநாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, பீளமேடு, கோவை மருத்துவக் கல்லூரி, சித்ரா வழியாக நீலாம்பூர் வரை 20.4 கிமீ தூரத்திற்கு 17 ரயில் நிலையங்களை கொண்டும், சக்தி சாலையில் காந்திபுரம் பகுதியில் துவங்கி கணபதி, ராமகிருஷ்ணா மில்ஸ், விநாயகபுரம், சரவணம்பட்டி, விஸ்வபுரம் வழியாக வளையம் பாளையம் வரை 14.4 கிமீ தூரத்திற்கு 14 ரயில் நிலையங்களை கொண்டும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய இருப்பதாக கடந்த ஆண்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ரயில் வழித்தடங்கள் அனைத்தும் உயர் மட்ட வழித்தடங்களில் அமைய உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தத் திட்டத்தின் இயக்குனர் அர்ஜுனன், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூத்த போக்குவரத்து நிபுணர் வெங்கியூ, சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொதுச் செயலாளர் ரேகா அடங்கிய குழுவினர் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இன்று மெட்ரோ ரயில் கால முறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
உக்கடம் பேருந்து நிலையத்தின் அமைப்பு, அங்கு உள்ள மேம்பாலத்தின் அமைப்புகள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர்கள் மெட்ரோ வழித்தட வரைபடங்களை கொண்டு ஆய்வு செய்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.