2 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; திருச்சி ஏர்போர்ட்டில் 141 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கிய விமானம்
தொழில்நுட்பக் கோளாறால் வானத்தில் வட்டமடித்த விமானம்; திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள்; பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால், கடந்த இரண்டு மணி நேரமாக பரிதவிக்கும் சூழலுடன் வானில் வட்டமடித்தது. விமானத்தில் கிட்டத்தட்ட 141 பயணிகள் இருக்கின்றனர்.
Advertisment
திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட இடத்திலேயே விமானம் சுற்றி வந்தது. எரிபொருள் நிறைந்து இருக்கும்போது தரையிறக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், எரிபொருளை குறைக்கும்பொருட்டு விமானம் புதுக்கோட்டையில் உள்ள நார்த்தாமலை சுற்றுவட்டாரப் பகுதி வானிலேயே சுற்றி வந்தது. அன்னவாசல், கீரனூர் துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 13 முறை சம்பந்தப்பட்ட விமானம் சுற்றியுள்ளது.
பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்கணாமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விமானம் வானில் வட்டமடித்து வந்த நிலையில் விமானம் பத்திரமாக தரையில் உரசி தரை இறக்கப்பட்டது. பயணிகள் 141 பேரும் பத்திரமாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விமான நிலையத்தில் குவிந்திருக்கும் உறவினர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் ஒரு திருப்தியான மனநிலைக்கு வந்திருக்கின்றனர்.
இருந்தாலும் விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் இன்னும் சுற்று பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது இன்னும் பயணிகள் வெளியே வராததால் கொஞ்சம் பரிதவிப்புடன் அனைவரும் காத்திருக்கின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“