/indian-express-tamil/media/media_files/EFZSnvoL402htg3rAo4A.jpeg)
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாகயும், மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் முதலிடத்திலும் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையம் 702 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வல்லாரைக் கணக்கான பொதுமக்கள் தினமும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Sharjah-bound Air India flight suffers hydraulic failure mid-air, lands safely at Trichy airport
இந்த நிலையில் இன்று மாலை திருச்சி விமான நிலையத்திலிருந்து மாலை 5.40 மணிக்கு சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்ல முடியாததால் விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க விமானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த விமானத்தில் 141 பயணிகள் சார்ஜா புறப்பட்டு சென்றனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு தான் விமானத்தை கீழே இறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு ஏற்ப விமானிகள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பயணிகளோ பரிதவிப்புடன் விமானத்தில் என்ன நடக்கும் என தெரியாமல் தவிப்புடன் இருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், அரசுத்துறை, விமானத்துறை அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் முகமிட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரும் தீயணைப்புத்துறை வீரர்களும் தயார் நிலையில் இருக்கும் சூழலால் பயணிகளை ஏற்றி விட வந்த உறவினர்களும் அச்சத்தில் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.