/indian-express-tamil/media/media_files/2025/09/06/airport-moorthy-2025-09-06-14-25-11.jpg)
Airport Moorthy attack
சென்னை, செப். 6: பிரபல யூடியூபர் ஏர்போர்ட் மூர்த்தி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பா.ம.க நிர்வாகி ஒருவரின் வீட்டில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க பா.ம.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அருள் டி.ஜி.பி அலுவலகத்திற்குச் சென்றார். அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஏர்போர்ட் மூர்த்தி சென்றிருந்தார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டி.ஜி.பி அலுவலகம் முன்பு ஊடகவியலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், "வி.சி.க வாழ்க" என முழக்கமிட்ட ஒரு நபர், திடீரென ஏர்போர்ட் மூர்த்தியைத் தாக்கத் தொடங்கினார். இந்த தாக்குதலில் மூர்த்திக்கு பலத்த அடி விழுந்ததுடன், அவரது சட்டை கிழிக்கப்பட்டது. நிலைமை கைமீறிப்போகும் சூழலில், மூர்த்தி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய கத்தியை எடுத்து தற்காத்துக் கொள்ள முயன்றார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபர் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
திருமாவளவன் மீது மூர்த்தி குற்றச்சாட்டு
தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னை கொலை செய்ய திருமாவளவன் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக இரண்டு முறை காவல்துறையில் புகார் அளித்தும், அதனை ஏற்க காவல்துறை மறுத்துவிட்டதாக மூர்த்தி தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதல் குறித்து காவல்துறைக்கு முன்பே தெரியும் என்றும், திருமாவளவனுக்கு எதிராக புகார் அளித்தால் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று காவல்துறையினர் தனக்கு அறிவுறுத்தியதாகவும் மூர்த்தி குற்றம் சாட்டினார். சமூக வலைதளங்கள் மற்றும் பொது மேடைகளில் திருமாவளவனை விமர்சித்தது தொடர்பாகவே தன்னைத் தாக்கியவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் X பக்கத்தில் அவர் வெளியிட்ட கண்டன அறிக்கை பின்வருமாறு
டிஜிபி அலுவலக வளாகத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு அவமானகரமான எடுத்துக்காட்டு!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 6, 2025
சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனரை சந்திப்பதற்காக காத்திருந்த புரட்சித் தமிழகம் கட்சித்…
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முறை கூறிவிட்டேன். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ, அக்கறையோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இது தான் காரணம் ஆகும்.
தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மூர்த்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என அன்புமணி அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, காவல்துறையினர் கண்முன்னே, விசிக கட்சியினர் தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில், எதிர்க்கருத்தை எதிர்கொள்ள இயலாத கோழைகள்தான், இது போன்ற… pic.twitter.com/YSUiZSkSf7
— K.Annamalai (@annamalai_k) September 6, 2025
டிஜிபி அலுவலக வாயிலில், ஒரு கட்சியின் தலைவர் தாக்குதலுக்குள்ளாகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. விசிக கட்சியினர், இந்த ரவுடித்தனத்தை விட்டுவிட்டு, முதலில் அவர்கள் கட்சிக் கொடிக்கம்பம் வைக்க திமுகவிடம் அனுமதி பெற முயற்சிக்கட்டும்.
அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைத் தாக்கிய சமூகவிரோதிகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.