scorecardresearch

தமிழ்நாட்டு விமான நிலையங்களில் ரூ.7,000 கோடி செலவிட திட்டம் – இந்திய விமான நிலைய ஆணையம்

இந்திய விமான நிலைய ஆணையம் இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் ரூ. 7,000 கோடிக்கு மேல் செலவிட திட்டமிட்டுள்ளது என்று புதுடெலியில் உள்ள தெற்கு மண்டல செயல் இயக்குநர் சஞ்சீவ் ஜிண்டால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாட்டு விமான நிலையங்களில் ரூ.7,000 கோடி செலவிட திட்டம் – இந்திய விமான நிலைய ஆணையம்

இந்திய விமான நிலைய ஆணையம் இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் ரூ. 7,000 கோடிக்கு மேல் செலவிட திட்டமிட்டுள்ளது என்று புதுடெலியில் உள்ள தெற்கு மண்டல செயல் இயக்குநர் சஞ்சீவ் ஜிண்டால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

சென்னையின் 2வது விமான நிலையம் அமையும் இடத்தை தேர்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும், ஓசூரில் சிறப்பு விமான நிலையம் அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் இன்னும் 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் ரூ. 7,000 கோடிக்கு மேல் செலவிட திட்டமிட்டுள்ளது என்று புதுடெலியில் உள்ள தெற்கு மண்டல செயல் இயக்குநர் (பொறியியல் – சிவில்) சஞ்சீவ் ஜிண்டால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனைய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகளை சஞ்சீ ஜிண்டால் ஆய்வு செய்தார். பின்னர், விமானப் போக்குவரத்துத் துறையில் அதிகம் செலவு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையம், திருச்சி சர்வதேச விமான நிலையம் போன்ற முக்கிய விமான நிலையங்களை மேம்படுத்துவதோடு, மதுரை, தூத்துக்குடி, கோயம்புத்தூர் விமான நிலையங்களையும் மேம்படுத்த வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் இலக்காக உள்ளது என்று கூறினார்.

இது குறித்து சஞ்சீவ் ஜிண்டால் கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு ஆலோசகரை அழைத்துள்ளோம், விரைவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் நிலத்தை கையகப்படுத்த உள்ளோம்” என்று கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஓடுபாதை விரிவாக்கம், புதிய முனையக் கட்டிடம், புதிய டவர், புதிய தீயணைப்பு நிலையம் ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறிய சஞ்சீவ் ஜிண்டால், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த 3 விமான நிலையங்களும் பெரிய விமானங்களைக் கையாளும் நிலையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஏர்பஸ்-321 விமானங்களைக் கையாளுவதற்கு ஏற்றவாறு தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுபாதையின் நீளம் தற்போதைய 1,350 மீட்டரிலிருந்து 3,115 மீட்டராக நீட்டிக்கப்படும் என்று சஞ்சீவ் ஜிண்டால் கூறினார். நாடு முழுவதும் உள்ள 24 விமான நிலையங்களை பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு கட்டிடங்களாக உருவாக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக சஞ்சீவ் ஜிண்டால் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Airports authority of india plans to spend more than rs 7000 crore in airports of tamilnadu