ஏர்டெல் தனது 5ஜி சேவையை சென்னையில் வியாழக்கிழமை (அக்.6) தொடங்கியது.
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
இந்தச் சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4 நகரங்களில் 5ஜி பீட்டா சோதனையை தசரா பண்டிகையை முன்னிட்டு அக்.5ஆம் தேதி தொடங்கியது.
ஜியோ தனது 5ஜி சேவையை முதல்கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசியில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து தனது பயனர்களுக்கு வெல்கம் ஆஃபர் (welcome offer) கொடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் 5ஜி சேவை கிடைக்கும் என ஏர்டெல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சென்னையில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இந்தச் சேவையை பயனர்கள் 4ஜி சிம் கார்டிலேயே பெறலாம். எனினும் 4ஜியை காட்டிலும் 5ஜி 30 மடங்கு அதிக வேகம் கொண்டது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு 5ஜி சேவை கிடைக்க வேண்டும் எனில் இணையத்திலும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“