சார்ஜாவில் இருந்து நேற்று கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனர்.
அப்போது திருவாரூர் பகுதியை சேர்ந்த தீபா(28) மற்றும் கடலூரை சேர்ந்த மணிகண்டன்(28) ஆகிய இரண்டு பயணிகள் உள்ளாடை மற்றும் வயிற்று பகுதிக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
/indian-express-tamil/media/media_files/k15uSHyuWqyZ5q4jGHxz.jpeg)
இதனை அடுத்து அவர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மதிப்பு 1.57 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“