தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான, திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டல ஆலோசனைக் குழுவின் (LAC) புதிய தலைவராக தொழில் அதிபர் சேகர் ரெட்டி, தொடர்ந்து மூன்றாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்றார்.
சென்னை டி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சேகர் ரெட்டி, சென்னை டி நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், வெங்கடேஸ்வரா கோவிலின் உத்தேச விரிவாக்கப் பணிகளில் கவனம் செலுத்துவதே தனது முதன்மையான பணியாக இருக்கும் என்று கூறினார்.
தற்போதுள்ள கோவில் வளாகம் தோராயமாக ஐந்தரை நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. தி.நகர் கோவிலை ஒட்டிய நிலங்களை கையகப்படுத்தி, பதினொரு கிரவுண்ட் நிலத்துக்கு கோவில் வளாகத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இதுவரை 19 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது. மேலும், நன்கொடை வரும் என்று எதிர்பார்க்கிறோம். 35 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கப்பட்டு உள்ளது.
திருமலா அறக்கட்டளை சார்பில் வரும் காலங்களில் ஏழை மக்களுக்கும், திருமண உதவி செய்ய உள்ளோம். இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் 2 ஏக்கரில் ஏழைகளுக்கு இலவச திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க இருக்கிறது, என்று சேகர் ரெட்டி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“