தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் நேற்று தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். அஜித் பிறந்தநாளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதால் அரசியலாக மாறியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், ரசிகர் மன்றம் வேண்டாம் என்று தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தவர். ஆனாலும், அவருக்கு இன்னும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது படத்தின் புரோமோஷனுக்காகக்கூட அஜித் ஊடகங்களை சந்திப்பது இல்லை. எந்தக் காலத்திலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று உறுதியாக அறிவித்தார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகங்களின் வெளிச்சம், சினிமா வெளிச்சம் படாமல் இருக்க வேண்டும் என்பதில் அஜித் கவனமாக இருக்கிறார். அஜித்தின் வலிமை படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், மே 1ம் தேதி அஜித் தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அஜித் பிறந்தநாளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதால் அரசியலாக மாறியுள்ளது.
நடிகர் அஜித் என்றால் வெளிப்படையாக தனது கருத்தை சொல்லக்கூடியவர் என்ற இமேஜ் சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது. அஜித் எப்போது இந்த அரசியலுக்குள் வந்தார் என்றால், 2010ம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அஜித், இது போன்ற அரசியல் விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வரவழைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். ஐயா, எங்களை நடிக்க விடுங்கள். அரசியலையும், சினமாவையும் ஒண்ணாக்க பாக்கிறாங்க. இதற்கு ஒரு நல்ல முடிவை எடுங்க ஐயா என்று மேடையில் தைரியமாக பேசி கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், அவரின் பேச்சை கேட்டு எழுந்து நின்று கைதட்டினார். அதற்கு அடுத்து அஜித் கலைஞர் கருணாநிதி உடனான சந்திப்பின்போது, கலைஞர் அவரின் தைரியத்தைப் பாராட்டினாலும், அஜித்தின் அந்த பேச்சால், திமுகவினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. அப்போதே அஜித் அரசியல் வட்டத்துகுள் வந்துவிட்டார்.
இந்த நிலையில்தான், நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாளில்,
இந்த நிலையில்தான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படி, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தலைவர்களும் பாஜக தலைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியலாக மாறியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ட்விட்டரில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதில், “உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இதயதெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்களின் ஆசியை பெற்றவரும்,சமூக கருத்துக்களை எண்ணற்ற இளைஞர்களுக்கு 'வலிமை' போன்ற திரைப்படங்கள் மூலம் எடுத்துரைத்து நல்வழிப்படுத்தும் சகோதரர் #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” என பதிவிட்டு உள்ளார்.
அதே போல, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன்.” என்று ட்விட்டரில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இப்படி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பதன் மூலம் அஜித்தின் பிறந்தநாள் அரசியலாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.