நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியம் உடல் நடலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் இந்த செய்தி கேட்டு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியம்- தாய் மோகினி சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெசண்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சோகத்திலிருந்து அஜித் மீண்டு வர வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.