scorecardresearch

அஜித்தை எதிர்பார்த்த கூட்டம்; வந்தவர் யாஷிகா; ஆனாலும் ரசிகர்கள் குஷி!

Yashika anand visited the samayapuram temple and fans clicked selfie with her Tamil News: சமயபுரம் கோவிலுக்கு நடிகர் அஜீத்குமார் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் அஜீத்குமார் வருவார் என காத்திருந்து, யாஷிகாவை கண்டவுடன் அவருடன் செல்பி எடுப்பதற்கு முண்டியடித்தனர்.

Ajith Kumar expected to come Samayapuram Temple, BUMSYashika came; But fans happy
Yashika Aannand in place of Ajith Kumar – Fans shocked

க. சண்முகவடிவேல்

Yashika anand Tamil News: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஏழு நிலை புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலமானவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தார். இதேபோல் இரவு 8.30 மணிக்கு நடிகர் அஜீத்குமார் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் பின் வாசலில் அஜீத்குமாரை காண ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்தத் தகவலறிந்த சமயபுரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 9 மணி வரை நடிகர் அஜித்குமார் கோவிலுக்கு வரவில்லை.இதனால் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் புகழ் மற்றும் திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார். அஜீத்குமார் வருவார் என காத்திருந்த ரசிகர்கள் யாஷிகாவை கண்டவுடன் அவருடன் செல்பி எடுப்பதற்கு முண்டியடித்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாக அவரை எங்கும் நகர விடாமல் சூழ்ந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கூட்டத்தினரை ஒருவராக சமாளித்து யாஷிகாவை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சமயபுரம் திருக்கோயில் வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ajith kumar expected to come samayapuram temple yashika came but fans happy

Best of Express