சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் கோவிலில் ஏற்பட்ட நகை திருட்டு வழக்கில், சிறப்பு தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற அஜித் குமார் காவலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி தமிழகத்தை உலுக்கியுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/7bed6688-cb7.jpg)
இந்த மரண வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் மேலும் இந்த வழக்கை மதுரை 4-வது கோர்ட்டின் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதியின் விசாரணைக்கு போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதியின் விசாரணைக்கு போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி, இன்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முன்னதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்யும் போது, காவல்துறையினரின் தாக்குதல் தொடர்பாக பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. நீதிபதிகள், அரசு மற்றும் காவல்துறையினரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து, வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.