அஜித் குமார் கொலை வழக்கு: சிபிஐ இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏற்கனவே, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு சிபிஐக்கு காலக்கெடு விதித்தது. அதனைத் தொடர்ந்து சிபிஐ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தது.

ஏற்கனவே, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு சிபிஐக்கு காலக்கெடு விதித்தது. அதனைத் தொடர்ந்து சிபிஐ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தது.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-08-20 at 5.13.26 PM

Sivaganga custodial death

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

Advertisment

இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. ஏற்கனவே, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு சிபிஐக்கு காலக்கெடு விதித்தது. அதனைத் தொடர்ந்து சிபிஐ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தது.

இதனிடையே, கைதான 5 போலீஸ்காரர்களின் நீதிமன்ற காவல் கடந்த 13-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மடப்புரம் கோவில் காவலாளர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக, சிபிஐ இறுதி குற்றப்பத்திரிகையை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ளது. அதில், பேராசிரியை நிகிதாவின் கார் பார்க்கிங்கை விட்டு வெளியே சென்றதா, நகை திருட்டு சம்பவம் உண்மையிலேயே நடந்ததா என்பதற்கான விசாரணை விவரங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: