/indian-express-tamil/media/media_files/rZs92CpmtgRUglKGdJNe.jpg)
பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
உலகாளவிய இந்தியாவின் வளர்ச்சியில் பெண் கல்வி முன்னேற்றம் முக்கிய பங்கு வகிக்கும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ரவி தெரிவித்தார்.
கோவையில் அறுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த (தனியார்) பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (10.12.2023) நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஜி.ரவி கலந்து கொண்டு "2019-ம் ஆண்டு மற்றும் முதுநிலை 2020"ஆம் கல்வியாண்டைச் சேர்ந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 46 மாணவிகளுக்கும் முதுநிலைப் பட்டம் பெற்ற 570 மாணவிகள் மற்றும் 1800 இளநிலை மாணவிகள் என மொத்தம் 2416 மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார்
அப்போது அவர் மாணவிகள் மத்தியில் பேசியதாவது:
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர் பாரதியின் கனவு தற்போது நனவாகி வருவதாக குறிப்பிட்டார்.
கல்வி கற்பதன் அவசியம் பற்றி குறிப்பிட்ட அவர் உலகின் எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் இளம் தலைமுறை முக்கிய பங்கு வகிக்கும் என பெருமிதம் தெரிவித்தார்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பன்மிக தன்மை கொண்ட தலைவர்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.