Advertisment

மருத்துவமனையில் துரை அழகிரி: ஓடோடி சென்ற மு.க. ஸ்டாலின்

மு.க. அழகிரியின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான துரை தயாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.

author-image
WebDesk
New Update
durai dayanidhi's 40 crore worth assets seized ED reports - மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் ஏன்? அமலாக்கத்துறை அறிக்கை

அழகிரி மகன் துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

mk-stalin | முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான துரை தயாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று (டிச.7) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரை இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் சந்தித்துள்ளனர். மு.க. ஸ்டாலின், சுமார் 10 நிமிடங்கள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளார்.
தொடர்ந்து, துரை தயாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் வீடு திரும்பினார். துரை தயாநிதி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

துரை தயாநிதிக்கு மூளை பக்கவாத பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இது பற்றி அறிந்ததும் மு.க அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment