காணும் பொங்கலை ஒட்டி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால், நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக, அலங்காலநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கிய போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் 800 காளைகள் களமிறக்கப்படுகின்றன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
களமிறங்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலா ஒரு தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த வீரருக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசளிக்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சாதாரண மக்களின் காளைகள் அல்லாமல் அமைச்சர், எம்.பிக்கள், பிரபலங்களின் காளைகளும் களமிறக்கப்பட்டன.
திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் காளை
வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளையை பிடித்திட வீரர்கள் சூழ்ந்திருந்த நிலையில், அதி வேகத்தில் ஒரு வீரரின் கையிலும் சிக்காமல் தமிழ்ச்சி தங்கப்பாண்டியனின் காளை வெற்றப்பெற்றது.
நிதியமைச்சர் பிடிஆர் காளை
நிதியமைச்சர் PTR பெயரில் களமிறங்கிய காளையை, வீரர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். களத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்த காளையை, வீரர்கள் பொறுமை காத்து பிடித்தனர். இருப்பினும், பிடிஆர் பெயரில் களமிறங்கிய காளை, அவருடையதா இல்லையா என்று வர்ணனையாளர்களே குழம்பி விட்டனர் என்பது தான் உண்மை.
அமைச்சர் அன்பில் மகேஸ் காளை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து வெளியே வந்த அமைச்சர் அன்பில் மகேஸ் காளை என்டீரி பார்த்தே, வீரர்கள் தெறித்து ஓடினர். ஒருவர் மட்டும் காளையை பிடித்தப்படி செல்ல, அவரிடமிருந்து தப்பித்த காளை, அங்கிருந்தவர்களை ஆட்டம் காண செய்தது. காளையை கண்டு, வீரர்கள் அங்கும் இங்கும் தெறித்து ஓடினர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் காளைhttps://t.co/WciCN2SQmv | #திமிலும்திமிரும் | @Anbil_Mahesh | @Udhaystalin | @arivalayam | @evvelu | @mkstalin | @DMKITwing | #Jallikattu2022 | #ஜல்லிக்கட்டு | #News7tamilUpdates pic.twitter.com/VNzMkjJruN
— News7 Tamil (@news7tamil) January 17, 2022
இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் காளை
ஜல்லிக்கட்டில் தீவிர ஆர்வம் கொண்ட இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டைமான், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து போட்டிகளில் பங்கேற்க வைத்து வருகிறார்.
அந்த வகையில், அலங்காநல்லூர் ஜல்லிகாட்டில் களமிறங்கிய செந்தில் தொண்டைமானின் சோழன் காளை, நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்த நிலையில், திடீரென சீறிபாய்ந்து வந்தது. அதனை பிடிக்க முயன்றவர்கள் தட்டிவிட்டு, அங்கிருந்து வெளியேறி வெற்றிப்பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.