/indian-express-tamil/media/media_files/dYQ7G8vgUxoboyuIJgL3.jpg)
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்த போதிலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஆழியார் அணைக்கு வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடி எட்டியது.
6-வது முறையாக ஆழியார் அணை நிரம்பியது; பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை #AliyarDampic.twitter.com/9xAcPXoPei
— Indian Express Tamil (@IeTamil) August 8, 2024
இதனை தொடர்ந்து இன்று (ஆக.8) காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1225 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி
11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.