தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் அதிக கனமழை காரணமாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்றைய தற்போதைய நிலவரப்படி ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் 95.80 அடியாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டி இருந்தது. இந்நிலையில் அணைக்கு வினாடிக்கு 3,356 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“