கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 117.5 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,750 கன அடி உபரி தண்ணீர் ஆழியாற்றில் வெளியேற்றம்.

ஆழியாற்று கரையோர குடியிருப்பு பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினர் ஆளியார் ஆற்றங்கரை .ஆனைமலை .அம்பராம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றில் யாரும் குளிக்க .துணி துவைக்க கூடாது .கால்நடைகளை ஆற்றில் இரக்கக்கூடாது எனவும் வருவாய்த் துறையினர் .பொதுப்பணித்துறையினர், காவல் துறையினர் அறிவுறுத்தி தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி: ரகுமான், கோவை
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil